கடகம் ராசி அன்பர்களே..!
இன்று கடன் பாக்கிகள் வசூலாகி பரவசத்தைக் கொடுக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படக்கூடும். இருக்கும் வீட்டை புதுப்பிக்கக்கூடிய வாய்ப்பும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருக்கக்கூடியவர்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். சரக்குகளை அனுப்பும் பொழுதும் சேமித்து வைத்திருக்கும் பொழுதும் கவனம் வேண்டும். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கணவன் மனைவி இருவருக்குமிடையே நல்லுறவு நீடிக்கும். குடும்பத்தில் பிரச்சினை எதுவும் வராது. காதலில் உள்ளவர்கள் நிதானமாகப் பேசவேண்டும், கோபத்தை தவிர்க்க வேண்டும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும், ஏனென்றால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் நீல நிறம்.