சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எதிர்பார்த்தபடியே பொறுப்புகளும் பதவிகளும் வந்துச்சேரும்.
தாய்வழி ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவல்களாகவே இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சி இருக்கும். பணவரவு மட்டும் கொஞ்சம் குறைவாக இருக்கும். வாகனம் மற்றும் வீடுகள் மூலம் செலவுகள் அதிகரிக்கும்.
அவ்வப்போது மனதில் குழப்பங்கள் இருந்துக்கொண்டே இருக்கும். எதையும் செய்வதற்கு முன்பு தயக்கம் ஏற்படும். வீண் அலைச்சல் மற்றும் காரிய தாமதமும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல் உஷ்ணம் போன்ற பிரச்சினைகள் எழக்கூடும். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய வேலையை நீங்களே செய்வது நல்லது.
முக்கியமாக பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்ததுக்கொள்ள வேண்டும். இன்று நீங்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்தால் நல்லபடியாகவே நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்சிவப்பு நிறத்தில் ஆடைஅணிய வேண்டும், ஏனென்றால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் பெருமாள் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் இன்றையநாள் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்சிவப்பு மற்றும் நீல நிறம்.