Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு..! எச்சரிக்கை தேவை..! வீணலைச்சலைத் தவிர்க்க வேண்டும்..!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உத்தியோகத்தில் உயர்வு கிட்டும் நாளாக இருக்கும். உயர்மட்ட அதிகாரிகள் உங்களுடைய குரலுக்கு செவிச்சாய்ப்பார்கள்.

நண்பர்களுக்காக சில காரியங்களை செய்வதற்கு முயற்சி செய்வீர்கள். இன்று நீங்கள் ரகசியத்தை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இன்று இனியச்செய்தி ஒன்று வந்துச்சேரும். இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அன்னியர் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவதில் வில்லங்கம் ஏற்படலாம், ஆகையால் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் ஈடுபடுங்கள்.

மனைவியின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள், தாயாரின் உடல் நிலையிலும் கவனம் கொள்ளுங்கள். நண்பர்களுடன் பழகும்பொழுது கவனம் வேண்டும். இன்று உடல்நிலையில் சுறுசுறுப்பு குறைந்து சோர்வு அதிகரிக்கும், எனவே வீண் அலைச்சலை தவிர்க்கவேண்டும். இன்று யாரைப்பற்றியும் குறைகள் சொல்ல வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எதுவும் போடவேண்டாம். எந்தவொரு பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். முக்கியமாக வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லவேண்டும்.

பணவிஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். இன்று காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே அணுகவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும், ஏனென்றால் அது அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சூரியபகவான் வழிபாட்டையும் பெருமாள் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |