நாளைய பஞ்சாங்கம்
05-08-2022, ஆடி 20, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.57 வரை பின்பு வளர்பிறை நவமி.
சுவாதி நட்சத்திரம் மாலை 06.37 வரை பின்பு விசாகம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
வரலட்சுமி விரதம்.
லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.
கரி நாள்.
தனிய நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
நாளைய ராசிப்பலன் – 05.08.2022
மேஷம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சிறப்பான பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். எடுத்த காரியம் எளிதில் முடியும். எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் மன நிம்மதி அதிகரிக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் தேவை.
கடகம்
உங்களின் ராசிக்கு காலையிலேயே ஆச்சிரியப்படும் படியான தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார தேவைகள் எளிதில் நிறைவேறும், வழக்கு சம்பந்தபட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு நீங்கள் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு தனவரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். எதிர்பார்த்த உதவி தாமதமாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தினரால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனைத் தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு திடீர் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
தனுசு
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வருமானம் இரட்டிப்பாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று கூடுதலாகவே இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.