தனுசு ராசி அன்பர்களே…! இன்று இதமாக பேசி எல்லோர் மனதையும் கவர்ந்து விடுவீர்கள்.
தொழில் நலம் கருதி முக்கியம் முடிவு எடுக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றும் சிந்தனை ஏற்படும். குடும்பத்திலிருந்த கஷ்டங்கள் நீங்கும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வரும் லாபம் தடைபடாது. பூர்வீகச் சொத்துக்கான வருமானத்திற்கு தடை தாமதம் வந்தாலும் அவை நல்லபடியாகவே வந்து சேரும்.
மாலை நேரத்திற்கு பின் நல்ல செய்திகள் காத்திருக்கு. மனம் மகிழும் படியான செய்திகள் வந்து சேரும். தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய செய்திகள் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். உங்களுடைய தொழிலை விரிவு படுத்த கூடிய எண்ணம் மேலோங்கும். திட்டமிட்டபடி எதையும் செய்து வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள்.
பணத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். பழைய பாக்கிகளும் வசூலாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். காதலில் உள்ளவர்கள் சிறிது நிதானமாக செயல்பட்டால் போதுமானது. குடும்ப பொறுப்பில் இருப்பவர்கள் தீர விசாரித்து முடிவெடுக்க வேண்டும்.பெண்கள் சமையல் செய்யும் பொழுது எச்சரிக்கையாக இருத்தல் நல்லது. மாணவக் கண்மணிகள் விளையாடும் பொழுது கவனம் தேவை.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் பெருமாள் வழிபாட்டையும் செய்து வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் பச்சை நிறம்.