Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வேகம் அதிகரிக்கும்..! முன்கோபத்தை தவிர்க்க வேண்டும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும்.

காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாக காரணமாக இருப்பீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வீடு மற்றும் வாகனச் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளுக்காக கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களிடம் கவனமாக உரையாடுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும் நாளாக இருக்கும். சக பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். தேவையில்லாத பிரச்சினை தவிர்க்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |