Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தேவை பூர்த்தியாகும்…! அனுகூலம் உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! என்று சிந்தித்து செயல்படவேண்டிய நாளாக இருக்கும்.

சேமிப்பு பணம் கொஞ்சம் கரையும். சீரான உடல் நிலை மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு கண்டிப்பாக சாப்பிடுங்கள். பணத் தேவைகள் ஓரளவு கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும். குடும்ப சுமை கூடுதலாகத்தான் இருக்கும். கவலை இனம் புரியாமல் இருந்து கொண்டே தான் இருக்கும்.அதிக உழைப்பு குறைந்த வருவாய் கிடைக்கும்.

நல்லது கெட்டது நிர்ணயிப்பதில் தடுமாற்றம் இருக்கும். சிலருக்கு குடும்ப விஷயத்தில் தவிர்த்து புதிதாக தொழில் ரீதியில் வெளியூர் சென்று தங்க நேரிடும்.  வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு பஞ்சாயத்துகளிலும் கலந்து கொள்ள வேண்டாம். அடிக்கடி கோபமாக பேச நேரிடும். இதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொண்டால் போதுமானது.

அதேபோல் காரியங்கள் செய்யும் பொழுது அலட்சியம் காட்டாதீர்கள். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். மனைவியிடம் ஆலோசனை கேட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். இன்று மகர ராசி காரர்கள் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். அதேபோல் மாணவக் கண்மணிகள் விளையாடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 4. அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் இள மஞ்சள் நிறம்.

Categories

Tech |