மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று மனவருத்தம் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரிச்செய்ய வேண்டும். சுறுசுறுப்பாக எதையும் அணுகவேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளில் உங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டாம். நண்பர்களுடன் பழகும் பொழுது கவனம் தேவை. பணப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். பயணங்களின் பொழுது கவனம் தேவை. கணவன் மனைவி இருவரும் எடுக்கும் முடிவில் தெளிவு வேண்டும். நிதானமாக யோசித்து எதையும் செய்யவேண்டும். தெய்வீகபக்தி கூடும்.
யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். இன்று பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள். வேண்டியதை செய்துக் கொடுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு சிரமங்கள் தீரும் நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே ஏற்படுத்தும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வருவது நல்லபலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்.