Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(02-11-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

02-11-2020, ஐப்பசி 17 , திங்கட்கிழமை, துதியை திதி பின்இரவு 01.14 வரை பின்பு தேய்பிறை திரிதியை.

கிருத்திகை நட்சத்திரம் இரவு 11.49 வரை பின்பு ரோகிணி.

மரணயோகம் இரவு 11.49 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

கிருத்திகை.

முருக வழிபாடு நல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம்-  காலை 07.30 -09.00,

 எம கண்டம்- 10.30 – 12.00,

 குளிகன்- மதியம் 01.30-03.00,

 சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

இன்றைய ராசிப்பலன் –  02.11.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் குழந்தைகள் வழியில் வீண் செலவு உண்டாகும். சுபகாரியங்களில் மந்தநிலை இருக்கும்.வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லுங்கள் அதுவே நல்லது. உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்பு அதிகம் இருக்கும்.

 

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். வீட்டில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குழந்தைகள் வழியில் சுபச் செய்தி உண்டாகும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தர்ம காரியங்கள் நடைபெறும் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செய்தி கிடைக்கப் பெற்று மன நிம்மதி கூடும்.பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். தொழிலில் வெளிவட்டார நட்பு கூடும். ஆன்மீக காரியங்களில் நாட்டம் செல்லும்.

கடகம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த முயற்சி செய்தாலும் வெற்றி கொடுக்கும். பெரியவர்களின் ஆதரவால் முன்னேற்றம் அடைவீர்கள். தொழிலில் இருந்த எதிர்ப்புகள் விலகும். குழந்தைகளின் விருப்பங்கள் நிறைவேற்றப்படும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி பெறுவீர்கள். கடன்கள் வசூலாகும்.

சிம்மம்

உங்கள் இராசிக்கு மன அமைதி வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை தரும். சகோதர சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் எளிதில் பூர்த்தி ஆகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும்.வெளியூர் பயணங்களால் தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். வீட்டில் விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சினைகள் விலகும்.பெரியவர்களின் ஆலோசனையில் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியம் அனைத்தும் காலதாமதம் ஆகும்.தொழிலில் மற்றவர்களை நம்பி எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு மன அமைதி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய பாக்கி அனைத்தும் வசூலாகும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.

தனுசு

உங்கள் இந்த ஆசைக்கு குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பணவரவு இருக்கும். வங்கி கடன் எளிதில் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் வியாபாரம் சீரடையும். எலி பயணங்களால் அனுகூலம் கிடைக்கும்.தொழில் செய்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு எந்தக் காரியம் செய்தாலும் ஆர்வமின்றி செய்வீர்கள். வீட்டில் பெரியவர்கள் இடையே வாக்குவாதம் உண்டாகும். தேவையில்லாத செலவுகளால் சேமிப்புகள் குறையும். சிக்கனமாக செயல்படுவது நல்லது.உடனிருப்பவர்களின் ஆலோசனையால் தொழிலில் லாபம் உண்டாக கூடும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு பண வரவு தாராளமாக இருக்கும் அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும்.உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் வீடு தேடி வரும். புதிய கருவிகளை வாங்க முயற்சி கூடும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் அனுகூல பலன் உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு தொழிலில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான செயல்களை கூட எளிதில் முடித்து விடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும். தொழிலில் லாபம் பெருகும்.

Categories

Tech |