தனுசு ராசி அன்பர்களே…! என்று பயணங்கள் செல்லும் பொழுது ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும்.
சில தடைகளை தாண்டி தான் முன்னேறி செல்ல வேண்டியிருக்கும்.வெற்றிக்கு வழி இல்லாத வகையில் தான் வேலைகள் செய்ய வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சகோதரர்களிடம் தயவுசெய்து அன்பை வெளிப்படுத்த வேண்டும்.குடும்பத்தைப் பொறுத்தவரை ஓரளவு சந்தோசம் இருக்கு. பிரிந்து சென்ற நண்பர்கள் கூட வந்து இணையக் கூடும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பை மட்டும் வெளிப்படுத்துங்கள். கோபங்கள் ஏதும் வேண்டாம்.
கணவன் மனைவி இடையே இருந்த மனஸ்தாபம் நீ எங்கே அன்பு பெருகும்.பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனைகளில் இருந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதையும் கூடும்.
சமூக அக்கறையுடன் எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவீர்கள்.தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஓரளவு முன்னேற்றம் தரும் கூடிய நாளாக இருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரலாம் என்ற எண்ணம் இருக்கும்.இப்போது இருக்கக்கூடிய வீட்டை விட்டுவிட்டு புதிய வீட்டிற்கு செல்லலாமா என்ற எண்ணம் இருக்கும். வாகனயோகம் இருக்கு.
வாகன பராமரிப்புச் செலவும் இருக்கு. அதேபோல் வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக சென்றால் போதுமானது.காதலர்கள் எப்போதும் போலவே பேச்சில் கடுமையை காட்டாமல் அன்பை வெளிப்படுத்துங்கள்.மாணவ கண்மணிகளும் படிப்பில் கவனம் செலுத்துங்கள் மேற்படிப்பிற்காக முயற்சி செய்வீர்கள் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு எந்த செயலும் செய்தால் வெற்றி மேல் வெற்றி வந்து கிட்டும்.
ஒட்டுமொத்தமாக தனுசு ராசிக்காரர்கள் பொறுமை மிக்கவர்களாக இருந்தால் போதுமானது. நல்ல முன்னேற்றத்தை நீங்கள் அடைந்து கொள்ளலாம்.முக்கியமான செயலை ஈடுபடும்பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது நல்லது ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுத்த வாருங்கள் தோஷம் நீங்கி நல்லது நடைபெறும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண்-4 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.