கடகம் ராசி அன்பர்களே…! கருத்துக்களை பரிமாறும் போது கவனம் வேண்டும்.
சில நிகழ்வுகள் இனிமையாக அமையும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். திட்டமிட்டபடி எதையும் செய்து முடிக்க முடியும். மனதிடம் அதிகரிக்கக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நல்ல நட்பு மூலம் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வசதி கிடைக்கும். முன் யோசனையுடன் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டும். கடனாக கொடுத்த பணத்தையும் திரும்ப வசூல் செய்து விடுவீர்கள். பெண்களுக்கு சுய தொழில் அமையும்.
காதல் விஷயத்தில் பணிவு வேண்டும். மாணவர்கள் கல்வியில் அக்கறை கொள்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மட்டும் மஞ்சள் நிறம்.