தனுசு ராசி அன்பர்களே…! இன்று நண்பரின் உதவி பரிபூரணமாக கிடைக்கும்.
வாழ்வின் முக்கியமான லட்சியம் ஒன்றை நிறைவேற்றி விடுவீர்கள். வாழ்க்கை துணை உதவியுடன் சில முக்கியப் பணியையும் செய்வீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு இருக்கும். வீட்டு உபயோக பொருட்களையும் வாங்க கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிகர சூழ்நிலையும் அமையும். இன்று உங்களுக்கு நடக்கவிருந்த அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே நடக்கும். தடைகளைத் தாண்டியும் முன்னேறிச் செல்வீர்கள். பொருட்களை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினர் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.
கடுமையான உழைப்பு இருக்கும். உடலில் சோர்வு கொஞ்சம் ஏற்படும். காதலர்கள் எப்பொழுதும் போலவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் போதும். கணவர் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் பேசித் தீர்க்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமாண எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.