தனுசு ராசி அன்பர்களே…! நேற்றைய பிரச்சினை நல்ல முடிவை கொடுக்கும்.
நண்பர்களால் நல்ல காரியம் நடக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். கடனாக வாங்கிய பணத்தை திரும்பி கொடுத்து விடுவீர்கள். நிலுவை பணமும் வசூலாகிவிடும். மனதிற்குள் இருந்த குழப்பம் சரியாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். செய்யும் பணியை உற்சாகமாக செய்வீர்கள். திறமைகள் வெளிப்படும். பாராட்டுக்கள் கண்டிப்பாக கிடைக்கும். குடும்பத் தேவை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். சின்ன விஷயத்திற்கும் கோபம் வரும் நிதானமாக கையாள வேண்டும். கூடுதலாக வருமானம் கிடைக்கும். நகைகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தனவரவு பெருகும்.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் நல்ல நாள். கல்வி பற்றிய அக்கறை இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரியபகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 9.
அதிர்ஷ்ட நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.