Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வசீகரமான தோற்றம் வெளிப்படும்..! வருமானம் அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இன்றைய இழப்பை தவிர்க்கமுடியும்.

வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். மனதில் அமைதி நிறைந்திருக்கும். அனைவரும் உங்களிடம் அன்போடு நடந்துக் கொள்வார்கள். உழைத்து சம்பாதிக்கக்கூடிய திறமைகள் வெளிப்படும். பணவரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். கவனத்தை கையாள வேண்டும். எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள்.

ஆடம்பர பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். மனதிற்கு பிடித்தமான பொருட்களை வாங்கக்கூடும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். புதிய பொறுப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் நிறைந்துக் காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமானை வழிபட்டு வாருங்கள், இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |