Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (16-08-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

16-08-2022, ஆடி 31, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி இரவு 08.18 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.

ரேவதி நட்சத்திரம் இரவு 09.06 வரை பின்பு அஸ்வினி.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

நாளைய ராசிப்பலன் –  16.08.2022

மேஷம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு இல்லத்தில் தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிட்டும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் தீரும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் எளிதில் கிடைக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் இருக்காது. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். தெய்வ வழிபாடு நல்லது.

தனுசு

உங்களின் ராசிக்கு மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

மகரம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

மீனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் வேற்று மொழி நபர்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

Categories

Tech |