இன்றைய பஞ்சாங்கம்
03-11-2020, ஐப்பசி 18, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பின்இரவு 03.25 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.
ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 02.30 வரை பின்பு மிருகசீரிஷம்.
அமிர்தயோகம் பின்இரவு 02.30 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
முருக வழிபாடு நல்லது.
கௌரி விரதம்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் – 03.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு தொழிலில் கூட்டாளிகளின் வீண் பிரச்சனை சந்திக்கக்கூடும். கொடுக்கல் வாங்கும் நிலையில் இழுபறி நிலை இருக்கும். பணவரவு சுமாராக தான் இருக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிக்கனமாக இருங்கள் அதுவே நல்லது. நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு மன உறுதியுடன் எந்த செயலையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியில் வெளியூர் பயணங்களால் நட்பு கிடைக்கும். தொழிலில் லாபம் கிட்டும். சேமிப்புகள் உயரக்கூடும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி இல்லாத சூழ்நிலை இருக்கும். தொழிலில் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் இருக்கும். எந்த செயலிலும் நிதானமாக இருங்கள் அதுவே நல்லது. தொழிலில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன்கள் தீரும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் வரவுக்கு மீறிய செலவு இருக்கும். உறவினர்கள் மூலம் மன கஷ்டம் இருக்கும். விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சினைகள் தீரும். எடுக்கும் முயற்சிகளில் வீட்டில் ஆதரவை கிடைக்கும். தொழிலில் வேலைப்பளு நீங்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். வீட்டில் வெளியூர் பயணம் செல்வீர்கள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் லாபமடைவீர்கள்.தொழிலில் உள்ளவர்களிடம் போட்டி பொறாமைகள் விலகி நட்பு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
கன்னி
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் செலவுகள் இருக்கும். தொழிலில் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது. தொழிலில் எதிரியாக இருந்தவர்கள்கூட நண்பர்களாக மாறுவார்கள்.
துலாம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் வாகனங்களில் கவனமுடன் செல்வது நல்லது. பண விஷயங்களில் கவனம் முக்கியம். தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடுவது பிரச்சனையை தரும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் இருக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.தொழிலில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் பெறுவீர். உத்யோகத்தில் யுக்தி பயன்படுத்தி லாபம் உண்டாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் வீட்டில் மங்கல நிகழ்வுகள் உண்டாகும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய வீதியில் பொருளாதாரம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதாரரீதியில் நெருக்கடியில் இருக்கும். புதிதாக ரீதியில் தேவையில்லாத கருத்து வேறுபாடு இருக்கும். எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லதே தரும். தொழில் ரீதியில் வெளி பயணங்களால் முன்னேற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவி உண்டாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனக்கஷ்டங்கள் இருக்கும். குழந்தைகள் மூலம் எதிர்பாராத மனக் கஷ்டம் இருக்கும்.திருமண பேச்சு வார்த்தைகளில் இழுபறி நிலை உண்டாகும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் புதிய கருவிகளை வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நினைத்த காரியம் நினைத்த படி செய்து முடிப்பீர்கள். திருமண காரியங்களில் வெற்றி உண்டாகும். குழந்தைகளிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். முதியவர் இதில் புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.