தனுசு ராசி அன்பர்களே…!
இன்று புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உங்களுக்கு ஏற்படும்.
கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் இருக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுபவமாகும். இன்று ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். புத்தி சாதுரியத்தால் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலனைப் பெறுவீர்கள். நட்பால் ஆதாயம் ஈட்டிக் கொள்வீர்கள். சொன்ன சொல்லையும் நிறைவேற்றி காட்டுகிறார்கள். சமூகத்தில் அந்தஸ்தை பெறுவீர்கள். மற்றவர்கள் வியக்கும் வகையில் நடந்து கொள்வீர்கள்.
பாராட்டும் புகழும் கிடைக்கும். அதேபோல் செய்தொழிலில் சில மாற்றங்கள் செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கும். கூடுமானவரை பெரிய தொகையை பயன்படுத்தி எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட வேண்டாம், இதை மட்டும் நீங்கள் கவனம் கொள்ளுங்கள். மக்களிடம் பணம் வாங்கும் பொழுது கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று பிள்ளைகளால் முன்னேற்றமான சூழல் இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாகவே இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லை. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிரவுன் நிறம்.