Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தைரியம் கூடும்..! நெருக்கம் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! என்று மறக்க முடியாத சம்பவங்கள் நடக்கும் நாளாக இருக்கும்.

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோசத்தை கொடுக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தி அடைவீர்கள்.யாரையும் நேருக்குநேர் எதிர்க்காமல் இருப்பது நன்மையை கொடுக்கும். கெட்ட கனவுகள் கொஞ்சம் தோன்றலாம்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் இருக்கும். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் போதுமானது. மாலை நேரங்களில் நடைப்பயிற்சி கொள்ளுங்கள் உடலை வலுப்படுத்துங்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கையாளவேண்டும். கோபமில்லாமல் பேச வேண்டும். அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

மாணவக் கண்மணிகள் கடுமையாக படித்த பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். பாடத்தில் கவனம் கொள்ளுங்கள். விளையாட்டைச் கொஞ்சம் நாளைக்கு தள்ளி வையுங்கள். அதேபோல் விளையாடினாலும் கவனமாக விளையாட வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது இளம் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுத்து வாருங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு.

அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |