மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் வகையில் நடந்துக் கொள்வீர்கள். காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நிறைவேறும்.
சகோதர வழியில் ஒற்றுமை பலப்படும். எதிர்பார்த்த தகவல் மனதிற்கு சந்தோசத்தைக் கொடுக்கும். எந்தவொரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வீர்கள், அதனால் வெற்றியும் பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.
பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் சூழல் அமையும். முயற்சிகள் சாதகமான பலன் கொடுக்கும். சிறிய விஷயங்களில் மனநிறைவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மாணவ மாணவியர்கள் இன்று கல்வியில் சிறந்து காணப்படுவீர்கள்.
இன்று காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு, முருகப் பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்து கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.