ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று சிந்தனைகள் வெற்றிப் பெறுவதற்கு சிவாலய வழிபாடும், முருகப் பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
குடும்பத்திலும் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தங்களின் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரலாம். போட்டிகள் விலகிச்செல்லும். வாடிக்கையாளருடன் அனுசரித்துச் செல்லவேண்டும். இன்று வியாபார ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். யாரையும் நம்பாமல் பொறுப்புகளை நீங்களே செய்ய வேண்டும்.
இன்று பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நிதி மேலாண்மையிலும் கவனம் கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக பக்தி கூடும். ஆன்மீகத்திற்காக சிறு தொகையைச் செலவிட நேரிடும். இன்று நீங்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் எதையும் மேற்கொண்டால் வெற்றி உங்கள்பக்கம் இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள்.
அக்கம்பக்கத்தினரிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாலை நேரத்தில் வெண்கடுகும், சாம்பிராணியும் கலந்து தூபம் போடுங்கள், அன்றைய நாள் மிகவும் உன்னதமாக இருக்கும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்துக்கொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதேபோல் சிவபெருமான் வழிபாடும், முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.