மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.
உறவினர்கள் சிலரால் அதிகமான விரயங்கள் ஏற்படும். அதேபோல் அவர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். வரவு திருப்தியளிக்கும். கலைத் துறையை சார்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தளவு வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் பிரச்சனைகள் இல்லாமல் செல்லும். அதேபோல் அரசியல் துறையில் உள்ளவர்களுக்கும் சுமுகமான நாளாக இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.
பயணங்கள் செல்லும் பொழுதும் உடமைகள் மீதும் எச்சரிக்க வேண்டும். இன்று நீங்கள் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கோபத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும். வேலையில் கவனம் தேவை. இன்றே யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் முன்னேற்ற செய்வது நல்லது. கணவன் மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்துக் கொள்ளுங்கள். இன்று உணவு விஷயத்தில் கவனம் தேவை.
உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகள் எழக்கூடும். இன்று மாலை நேரத்தில் வென்கடுகு தூபம் போடுவது மிகவும் நல்லது, மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டையும், முருகப்பெருமான் வழிபாட்டையும் நீங்கள் மேற்கொள்ளுங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் நீல நிறம்.