தனுசு ராசி அன்பர்களே..!
வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வு பெற்று மகிழ்ச்சி அடையக்கூடும். மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் மன நிம்மதியை பாதுகாப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். உணவு உண்பதில் கட்டுப்போட வேண்டும். பயன்தராத பொருட்களை வாங்குவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். பணபாக்கி வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்துக் காணப்படும். பூர்வீக சொத்துகளால் சாதகபலன் கிட்டும். ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அன்பு அதிகமாக இருக்கும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிட்டும்.
வாக்குவாதங்கள் மேற்கொள்ள வேண்டாம். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.