விருச்சிகம் ராசி அன்பர்களே…! அலைபேசி வழியில் ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும்.
பழைய வாகனங்களை புதுப்பிக்கும் சிந்தனைகள் மேலோங்கும். வீடு கட்டும் அல்லது வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். தொழில் செய்பவர்கள் பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேறுவதற்கு அடி எடுத்து வைப்பார்கள். நட்பால் நல்ல பணவரவு இருக்கும். அவதிப்பட நிலையில் உள்ளவர்கள் விடுபடுவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தவீர்கள். முன்னேற்றம் தரும் சூழல் அனைத்து விதங்களிலும் நடக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.குறைந்த முதலீட்டில் எதையும் செய்யுங்கள் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதலின் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக அமையும்.
குடும்பத்தை பொறுத்த வரையும் இன்று சுமுகமாகவே செல்லும். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் சூழல் இன்று உருவாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 7.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.