தனுசு ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு அந்தஸ்து உயரும் நாளாக இருக்கும்.
எடுக்கும் முயற்சியில் நல்ல ஆதாயம் தேடி வர இருக்கும். நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிட்டும். குழந்தைகளிடம் அதிகமாக அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வருமானம் நல்லபடியாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்கும். லாபம் பன்மடங்கு உயரும்.
பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வீட்டில் சண்டை ஏற்பட்டு சரியாகும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். வீண் விவகாரங்களில் தயவுசெய்து தலையிட வேண்டாம். விருந்தினர் வருகை இருக்கும். மனதில் புதிய தெம்பு உற்சாகம் பெற இருக்கும். எதிர்பாராத உதவியால் நன்மை ஏற்படும். காதலில் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்ல நாளாக இருக்கும். பிரச்சனை இல்லை.மாணவ கண்மணிகளுக்கும் கல்வியில் அறிவு மிகுந்து காணப்படும்.
கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். வெற்றி கிட்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று சிவபெருமான் வழிபாட்டையும் பெருமாள் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 3. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.