மீனம் ராசி அன்பர்களே…! தன வரவு தாராளமாக இருக்கும்.
தடைகள் விலகி செல்லும். கொடுத்த வாக்கையும் காப்பாற்றி விடுவீர்கள். பொன்னான நாளாக இன்றைய நாள் இருக்கும். நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். பொது வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். மனசுக்குள்ளேயே நல்ல மகிழ்ச்சி இருக்கும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்லுங்கள். நெடு தூர பயணமாக இருந்தால் ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். மாணவக் கண்மணிகள் சிரமமெடுத்து பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்ள எழுதிப்பாருங்கள்.
காதலில் உள்ளவர்கள் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். கோபமான பேசிய மட்டும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இன்றைய நாள் மீனம் ராசிக்காரர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். சிவபெருமான் வழிபாட்டையும் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறுதளவு தயிர் சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள் முன்னேற்றம் பெருகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்டநிறம் கருநீலம் மட்டும் மஞ்சள் நிறம்.