மீனம் ராசி அன்பர்களே…!
இது தனவரவு தாராளமாக இருக்கும்.
உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் பொருளாதாரமும் சீராக இருக்கும். பணவரவு நல்லபடியாக இருக்கும். அதேநேரத்தில் செலவுகள் கூடும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். சரக்குகளை கொஞ்சம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் அலைச்சலைக் கொடுத்தாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும் உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய நபர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
குடும்பத்தாரின் கலகலப்பான பேச்சு உங்களுக்கு மனதிற்கு இன்பத்தை கொடுக்கும். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். காதலில் உள்ளவர்களுக்கும் மிகவும் சிறப்பான நானாகவே இருக்கும். எந்த விதத்திலும் பிரச்சனை இல்லை. விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கும் இன்று முன்னேற்றமான சூழல் இருக்கும். அவர்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உங்களுடைய அணுகுமுறை மற்றவர்களை கவரக்கூடிய அளவில் இருக்கும். இன்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.