மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் கொஞ்சம் குறைவதால் உடல்நலம் கெடும்.
அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் இருக்காது. தடைப்பட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரவு ஓரளவுதான் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகிச்செல்லும். சக மாணவர்களின் உதவிகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரம் லாபகரமாக நடந்தாலும், பணத் தேவைகள் இருந்துக்கொண்டே இருக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தடைப்பட்ட அவர்களும் வந்துச்சேரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். காதலில் உள்ளவர்கள் நிதானப் போக்கை கையாள வேண்டும். வீண் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
பயனுள்ள விஷயங்களில் மட்டும் ஈடுபடுவது நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். அப்படியே சித்தர்கள் வழிபாடும் குருபகவான் வழிபாடும் மேற்கொள்ளுங்கள் காரியங்களில் வெற்றி உண்டாகும். சிறியளவு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுத்து வாருங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.