ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று தனலாபம் பெருகி மனமகிழ்ச்சி நிலவும். உடல் தெம்பாகி உற்சாகம் பிறக்கும்.
தன்னம்பிக்கை கூடுவதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்திக்கக்கூடும். இன்று சமூகத்தில் மதிப்பு கூடும், செல்வாக்கு உயரும். எதிர்ப்புகளை மீறி எடுக்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். அனைத்து காரியங்களும் சாதகமாகவே நடக்கும்.
இன்று சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியத்தை செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு இன்றையநாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் வெற்றி உண்டாகும்.
கணவன் மனைவி இருவருக்கும் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு நல்ல முன்னேற்றகரமான நாளாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கும் கல்வியில் வெற்றி உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்துக் கொள்ளுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.