கடகம் ராசி அன்பர்களே..!
இன்று முறையற்ற வழிகளில் பணம் செலவாகக்கூடும். வரவைப் பெருக்கிக்கொள்ள உழைப்பு தேவைப்படும்.
உறவுகளுக்கிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தை குறைத்தால் நன்மை ஏற்படும். வழக்குகளை ஒத்திப்போடுவது நல்லது. திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் நாட்டமும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சுபகாரியப் பேச்சுகள் இல்லத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை. பணவரவு சீராக இருக்கும். செலவினை கட்டுபடுத்த வேண்டும்.
காதலில் உள்ளவர்களுக்கு இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாடும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.