நாளைய பஞ்சாங்கம்
15-09-2022,
ஆவணி 30, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.01 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.
பரணி நட்சத்திரம் காலை 08.05 வரை பின்பு கிருத்திகை.
சித்தயோகம் காலை 08.05 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
கிருத்திகை விரதம்.
முருக வழிபாடு நல்லது.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
நாளைய ராசிப்பலன் – 15.09.2022
மேஷம்
உங்களின் ராசிக்கு உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உதவுவார்கள்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களால் அ-னுகூலப்பலன் உண்டாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். நண்பர்களின் உதவியால் பணகஷ்டம் தீரும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பகல் 02.28 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வேலையில் வீண் அலைச்சல் உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறைந்து மன அமைதி ஏற்படும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பகல் 02.28 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.