சிம்மம் ராசி அன்பர்களே..!
பிறருக்கு உதவிப்புரிவதில் பெருமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும்.
தானம் மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரியத்தில் சிறிய தடைகள் மற்றும் தாமதங்கள் வரக்கூடும். அனைத்து விஷயங்களிலும் சாதகப்பலன் உண்டாகும். குடும்ப பிரச்சினைகளும் கட்டுக்குள் இருக்கும்.
பணவரவு சீராக வந்துச்சேரும். வீண் செலவு அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் கவனம் வேண்டும். குழந்தைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுங்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். காதலில் உள்ளவர்கள் நிதானப் போக்கையே வெளிப்படுத்த வேண்டும்.
பேச்சில் கவனத்தைச் செலுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.