Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (06-11-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

06-11-2020, ஐப்பசி 21, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி காலை 06.37 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.

திருவாதிரை நட்சத்திரம் காலை 06.45 வரை பின்பு புனர்பூசம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

சஷ்டி விரதம்.

முருக வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

இன்றைய ராசிப்பலன் –  06.11.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமான நிலையில் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் அனைத்தும் விலகும். குழந்தைகள் மூலம் சில செய்திகள் வரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற கூடும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க காலதாமதம் ஆகும். தொழிலில் எதிர்பாராத செலவு உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பொறுப்புடன் செயல்பட்டால் பணப் பிரச்சனை நீங்கும். பெரியவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.உத்யோகத்தில் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கு. உறவினர்களின் அனுகூலம் கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்குஎந்த செயல் செய்தாலும் வெற்றி பெறுவதற்கு உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும்.உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் வீண் விரயம் ஏற்படும். உதவிகள் தடையின்றி கிடைக்கும். தொழிலில் சிலருக்கு புதிய பொறுப்பு கிட்டும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு திடீர் பணவரவு கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். தொழிலில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எங்களுக்கு அனுகூல பலன் கிடைக்கும். சுப காரியங்கள் உண்டாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு அதிகாலையிலேயே நல்ல செய்தி வீடு வந்து சேரும். திருமண சுபகாரியங்கள் நடைபெறும். அனுகூல பலன் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். வெளி நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் புதிய ஒப்பந்தம் நடைபெறும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உடல்நிலையில் மந்த நிலை உண்டாகும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தோல்வியை சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் உண்டாகும்.தொழிலில் வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சிறு பிரச்சனை வரும். எந்த செயல் செய்தாலும் தாமதமாகும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது.முகம் தெரியாதவர்களிடம் வீண் வாக்குவாதத்தை வைக்காதீர்கள் பிரச்சனையை உண்டாக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் உண்டாகும்.குழந்தைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் இருக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பெரியவர்களின் மதிப்பு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனை கிடைக்கப் பெறுவீர்கள்.

மகரம்

உங்களின் ராசிக்கு உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தரும் செய்தி உண்டாகும். உடல்நிலை சீராக இருக்கும். தெய்வ வழிபாட்டிற்காக தூர பயணம் செல்ல வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களிடம் அனுகூலம் கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களிடம் தேவையில்லாத கருத்து வேறுபாடு உண்டாகும். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சனை இருக்கும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பெரியவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய நிலை உண்டாகும்.வீட்டில் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள் அதுவே நல்லது. புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். பழைய கடன்கள் தீரும்.

Categories

Tech |