மீனம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்தேவைகளை பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும்.
நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பணவரவு ஓரளவிற்கு திருப்தியைக் கொடுக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அண்ணிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பேசவேண்டும். வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தாரின் ஆதரவு உண்டாகும். நண்பர்களின் உதவியும் கிடைக்கப்பெறும். மனதில் குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் காரியத்தை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். இன்று இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். கோபமான பேச்சினை தவிர்க்க வேண்டும். சக மாணவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வேலையைத் தொடங்குங்கள், அந்த வேலையை சிறப்பாக முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.