Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! செலவுகள் ஏற்படும்..! சேமிப்பு தேவை..!!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று எதிர்ப்புகள் அடங்கும் நாளாக இருக்கும்.

தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். பயணங்கள் நல்லவிதமாக அமையும். கலைப்பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்திலும் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசவேண்டும். யோசித்து எந்தவொரு காரியத்தையும் செய்யுங்கள், அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு இன்றையநாள் நல்ல லாபம் கிடைக்கும். கூடுதல் வருவாய் பெறக்கூடும். வீண் செலவை கட்டுப்படுத்துங்கள். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |