துலாம் ராசி அன்பர்களே…! இன்று தேவைக்கேற்ப பணம் உங்களைத் தேடி வரக்கூடும்.
நண்பர்களின் சந்திப்பால் கடைசி நேரத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்ப வருமானம் உயர்த்த புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். வியாபார விரோதம் உண்டாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் வந்து சேரும். கணவன் மனைவி இடையே நிதானத்தை கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது.பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் கொள்ளுங்கள். உறவினர் நண்பர்களிடம் கவனமாக பழக வேண்டும்.
சிற்றுண்டி செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் இருந்து கொண்டே இருக்கும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வழியே வந்த சிலர் சண்டை போடலாம். யாரையும் நம்ப வேண்டாம். பணம் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள். மாணவக் கண்மணிகள் முழுநேரம் பாடங்களில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.
இடைவிடாமல் படியுங்கள். கல்வியில் ஆர்வம் நல்லபடியாக தான் இருக்கு. சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பரிபூரணமாக இருக்கும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கை அணுக வேண்டும். கோபமில்லாமல் பேச வேண்டும். வாக்குவாதங்கள் தயவுசெய்து வேண்டாம்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.