Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (27-09-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

27-09-2022, புரட்டாசி 10, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பின்இரவு 02.28 வரை பின்பு வளர்பிறை திரிதியை.

அஸ்தம் நட்சத்திரம் காலை 06.16 வரை பின்பு சித்திரை.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 0.

சந்திர தரிசனம்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

நாளைய ராசிப்பலன் –  27.09.2022

மேஷம்

உங்களின் ராசிக்கு வருமானம் பெருகும். பணபற்றாக்குறை நீங்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த பிரச்சினைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு நீங்கள் கடினமாக முயற்சித்தால் மட்டுமே எடுத்த காரியத்தை முடிக்க முடியும். வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் கிடைக்கும் உதவியால் மனநிம்மதி உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சினையால் மன உளைச்சல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்ககூடும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சுப செலவுகள் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மகரம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

மீனம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் வாய்ப்பு அமையும்.

Categories

Tech |