இன்றைய பஞ்சாங்கம்
07-11-2020, ஐப்பசி 22, சனிக்கிழமை, சஷ்டி திதி காலை 07.24 வரை பின்பு தேய்பிறை சப்தமி.
புனர்பூசம் நட்சத்திரம் காலை 08.05 வரை பின்பு பூசம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 0.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் – 07.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். தொழிலில் அதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தெய்வ வழிபாடு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு. அதிகாலையிலேயே சுப செய்திகள் கிடைக்கும் மன மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளால் மதிப்பு பெருகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் உண்டாகும். புதிய பொருட்கள் சேர்க்கை இருக்கும். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உடல்நிலையில் மருத்துவ செலவு ஏற்படலாம். உறவினர்கள் வழியில் சிறு மனக்கஷ்டங்கள் உண்டாகும். தொழிலில் கவனம் செலுத்துங்கள் அதுவே நல்லது. உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சிக்கனமாக இருப்பதன் மூலம் பண நெருக்கடி நீங்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். நவீன பொருட்களை வாங்கும் யோகம் இருக்கும். உத்தியோக ரீதியில் ஆபாசமான பலன் உண்டாகும். வீட்டில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் மூலம் வீண் செலவு உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் மந்தநிலை இருக்கும்.உத்தியோகம் ரீதியில் இடையூறுகள் பின் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தொழிலில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
கன்னி
உங்களின் ராசிக்கு திடீர் பண செலவு இருக்கும். கடன் தொல்லை தீரும். வீட்டில் அமைதி உண்டாகும்.தொழிலில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூல பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும்.
துலாம்
உங்களின் ராசிக்கு நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் நண்பர்களால் நல்ல பலன் உண்டாகும்.தொழிலில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். வராத கடன் அனைத்தும் வசூலாகும். சேமிப்பு பணம் உயரும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் தடை தாமதம் உண்டாகும். வீட்டில் தேவையில்லாத பிரச்சனை உண்டாகும். குழந்தைகள் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் சுமுகமாக இருக்கும். அரசு வழி தொழிலில் இருப்பவர்களுக்கு அரசு உதவிகளும் உண்டாகும். கடன்கள் தீரும்.
தனுசு
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன குழப்பம் ஏற்படும். பிறரிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லதை கொடுக்கும். தொழிலில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.வெளி பயணங்கள் போது வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் வேண்டும். சுப காரியங்களைத் தள்ளி வைப்பது நல்லதைக் கொடுக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் அதிகரிக்கும் ஆர்வம். தொழிலில் அவர்கள் திறமைக்கேற்ப உயர்வு கிடைக்கும்.தொழில் ரீதியில் புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரநலை அமோகமாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உடல்நலம் சீராக இருக்கும். தொழிலில் இருப்பவர்கள் பொறுப்புடன் இருப்பார்கள்.சொத்து சம்பந்தமான சிக்கல்கள் விலகி மன நிம்மதி கிடைக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நினைத்த காரியத்தை செய்வதில் சில இடையூறு இருக்கும். வீட்டில் பெரியவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகும்.தொழிலில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் லாபம் கிட்டும். தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும்.