மிதுனம் ராசி அன்பர்களே…! காரிய வெற்றி காண கவனமுடன் செயல்பட வேண்டும்.
மனதில் இனம்புரியாத கவலை தோன்றும். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.புதிய முயற்சிகளை கைவிடுவதும் கவனமாக காரியங்கள் செய்வதும் நல்லது. மனக்குழப்பம் ஓரளவு இருக்கும். கூடுமானவரை மனதை ஒருநிலை படுத்துங்கள். வீண் அலைச்சல் சற்று இருக்கத்தான் செய்யும். சிக்கல்களை தீர்ப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
எண்ணிய காரியம் ஓரளவே கைகூடும். குறிக்கோள் நிறைவேறும் பிரச்சனை இல்லை.குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலையை செய்ய வேண்டும். காதலில் உள்ளவர்கள் கோபம் இல்லாமல் இருக்க வேண்டும்.
மாணவக் கண்மணிகள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுங்கள். சக மாணவர்களிடம் கோபப்படாமல் பேசுங்கள்.கல்வியில் ஓரளவு ஆர்வம் இருக்கும் பிரச்சனை இல்லை.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக வைத்து வாருங்கள்.இல்லையெனில் தயிர் சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.