துலாம் ராசி அன்பர்களே..! இன்று வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள் ஆக இருக்கும்.
உடன்பிறப்புகள் உங்கள் உள்ளம் அறிந்த நடந்து கொள்வார்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். மறைமுகப் போட்டிகள் விலகிச் செல்லும். தொழில் சீராகவே நடைபெறும். தொழிலில் வேகமாக வியாபாரம் இல்லாவிட்டாலும் நிதானமான போக்கு இருக்கும். பண வரவு இருக்கும் பிரச்சனை இல்லை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து தான் செய்ய வேண்டி இருக்கும். மாணவர்கள் எதிர்காலம் கல்வி பற்றிய முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அடுத்தவர்களின் யோசனை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும். பண விஷயத்தில் யாரையும் நீங்கள் பொறுப்புகள் கொடுக்க வேண்டாம்.
நீங்களே முன்னின்று செய்யுங்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கை வெளிப்படுத்துங்கள். பேச்சில் கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து வாருங்கள் இல்லை எனில் சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் பிங்க் நிறம்.