கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிக அதிக அளவு நடந்தது. அதில் பிளிப்கார்டு போன்ற மளிகை ஈகாமர்ஸ் வலைத்தளத்தின் பொருட்களை மிக எளிதாக வாங்க முடிந்தது. அதனால நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை களை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது ஒரு ரூபாய்க்கு ஷாப்பிங் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பிளிப்கார்ட்டில் ‘Flipkart big saving days sale’ சிறப்பு விற்பனை ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் , ASUS ROK PHONE 3 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12GB RAM மற்றும் 128GB மெமரி கொண்ட மாடல் போன் ரூ.45.999- க்கும், 8 GB RAM மற்றும் 128 GB மெமரி கொண்ட மாடல் ரூ.41.999- க்கும் வாங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.