Categories
சினிமா தமிழ் சினிமா

புகழ்பெற்ற குக் வித் கோமாளி….. அஸ்வினுடன் காதல்….? சுனிதா வெளியிட்ட காணொளி ….!!

அஸ்வினை தான் காதலிக்கவில்லை என்று குக் வித் கோமாளி சுனிதா விளக்கம் அளித்துள்ளார்

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நகைச்சுவையும் மற்றும் போட்டியும் கலந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  இதில் போட்டியாளரான அஸ்வின் குமாருக்கு இந்நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சுனிதா மற்றும் ஷிவானி அஸ்வினை சுற்றி வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சுனிதா அஸ்வினை உண்மையாக காதலிப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுனிதா கூறுகையில் “அஸ்வின் எனக்கு  நல்ல நண்பர் மட்டுமே. நான் அவரை காதலிக்கவில்லை” என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

https://www.instagram.com/tv/CK4IpDTIKPK/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |