குக் வித் கோமாளி பிரபலங்களின் வேடிக்கை புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கியவர்களும் குக்குகளாக அசத்தியவர்களும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
இன்னிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வினும், மணிமேகலையும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அஸ்வின் தனது தலையில் துண்டு அறிந்திருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.