Categories
தேசிய செய்திகள்

லாக்டவுனில் அடைக்கலம் …. மனைவியுடன் ஓடிய நண்பன்… கேரளாவில் பரிதாபம் ..!!

ஊரடங்கால் கஷ்ட்டப்பட்ட நண்பனுக்கு வீட்டில் தங்க வைத்தது தவறான உறவுக்கு வழிவகுத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

உலகையே உயிர் பலிகளால் மிரட்டி வரும் கொடிய கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து சின்னாபின்னமாகியது போல பலரின் திருமண உறவுகளிலும் அழிவை செய்துள்ளது வேதனைக்குரிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் தவித்த நண்பருக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்தவர்  நண்பனால் மனைவி மற்றும் குழந்தைகளை இழந்து  நிற்கும் துயர நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறை சேர்ந்த 32 வயதான லோதாரியோ எர்ணாகுளத்தில் உள்ள  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால், தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், அங்குல முவாட்டுபுழா நகரில் சிக்கி தவித்துள்ளார். உன்ன உணவு இல்லாமல், இருக்க இடமில்லாமல் திணறிய அவருக்கு எர்ணாகுளத்தில் நண்பர் ஒருவர் இருப்பதை அறிந்து, பல உறவினர்களை தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்ட நண்பரின்  தொலைபேசி எண்ணை வாங்கி, தன்னுடைய நிலை குறித்து தெரிவித்துள்ளார்.

லோதாரியோவின் நிலையை கேட்டு கஷ்டப்பட்ட நண்பரும், தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அழைத்து சென்றுள்ளார். ஊரடங்கால் அவருக்கு தேவையான உணவு, தங்க இடம் என அனைத்திலும் தன்னுடைய வீட்டிலே கொடுத்து, 1 மாத காலம் விருந்தாளியாக உபசரித்துள்ளார்.  இந்தநிலையில் தான் மூணாறு பகுதி கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. நிலைமை சரியானதை தொடர்ந்து லோதாரியோவை அவரின் நண்பன் வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் லோதாரியோ எதையும் பொருட்படுத்தாமல்  நண்பரின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

இதனால் சந்தேகத்துடனே நண்பனும் இருந்த நிலையில் திடீரென ஒருநாள் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டை வீட்டு ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீஸ் புகார் கொடுத்த நிலையில் போலீஸ் இருவரையும் புடித்து வந்தனர். அப்போது, பெண் போலீஸ் இருவரையும் அழைத்து விசாரிக்கும் போது, நான் புதிய காதலருடன் தான் செல்வேன், என்னுடன் தான் குழந்தைகளும் இருக்கும் என்று போலீசிடம் அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

போலீசாரும் எவ்வளவோ அறிவுரை கூறியும் அந்த பெண் கேட்காமல் புதிய காதலனுடன் செல்ல உறுதியாக இருந்து கடைசியில் சென்று விட்டார். அதுமட்டும் இல்லாமல் தன் பெயரில் கணவன் வாங்கி கொடுத்த கார் மற்றும் நகைகளையும் எடுத்துக்கொண்டு, குழந்தைகளுடன் சென்று விட்டார். இந்த பெண் ஏற்கனவே இதே போல இரண்டுமுறை திடீர் காதலனுடன் ஓடிபோனதாகவும், போலீசார் தலையிட்டு சேர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |