ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ஜப்பானில் நேற்று காலை 11 மணியளவில் எதிர்பாராதவிதமாக காகோஷிமா மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளியாக பதிவாகியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கிழக்கு தீர்க்க ரேகையில் 129.4 டிகிரியிலும், வடக்கு அட்சரேகையில் 29.4 டிகிரியிலும் சுமார் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் ஜப்பானின் டோக்கியோ மாகாணத்தில் நிலநடுக்கம் சில பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் அலறி அடித்து கொண்டு கட்டிடங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். அதேசமயம் இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.