Categories
உலக செய்திகள்

2 வாரத்தில் 3000 கிலோ குப்பை…. எவரெஸ்ட்டில் அகற்றம்!!

நேபாள அரசின் சார்பில், உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் , 3,000 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

1953ஆம் ஆண்டில் முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு எட்மெண்ட் ஹிலாரி, டென்சிங் ஆகியோர்  சாதனை படைத்தனர். இதனை  நினைவுபடுத்துவதற்கு, நேபாள அரசு எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை  கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவோர் வழியில் விட்டு சென்ற சமையல் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் அவர்களது உடைமைகள்   போன்றவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Related image

இப்பணியினை  நேபாள அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து  ஈடுபட்டுவருகின்றன. கடந்த 2 வாரத்தில் மட்டும்  சுமார் 3,000 கிலோ எடையுள்ள குப்பைகள் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. மேலும் மலையில் இறந்து கிடந்தவர்களின்  சில உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. எவரெஸ்ட் சிகரத்திலிருந்து சுமார் 10,000 கிலோ வரையிலான குப்பைகளை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |