தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘DR 56’. ஹரிஹர பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ளது.
பிரவீன் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை பிரியாமணி பேசியதாவது, தமிழில் சாரு லதா படத்திற்கு பிறகு நான் நடித்து வெளியாகும் திரைப்படம் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த கதையை இயக்குனர் முதலில் என்னிடம் சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
மேலும், இப்படி எல்லாம் நடக்குமா என இயக்குனரிடம் கேட்டபோது அவர் சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார். இதை பார்த்துவிட்டு நான் மிரண்டு போய் விட்டேன். எதிர்பார்த்தபடியே படம் நல்லபடியா வந்திருக்கு. இந்த திரைப்படம் மருத்துவ மாபியா கும்பலை பற்றிய ஒரு படம் . இதில் ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன் என பிரியாமணி பேசினார்