Categories
உலக செய்திகள்

பல வருஷமா இப்படி தான் நடக்குது..! மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கரம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

சிரியாவில் எதிர்பாராதாவிதமாக மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள், நோயாளிகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் நீண்ட காலமாக நடந்து வரும் போரால் குழந்தைகள், பொதுமக்கள், பெண்கள் என லட்சக்கணக்கானோர் பலியாகின்றனர். மேலும் அந்த நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மீது கடந்த 10 வருடங்களில் மட்டுமே 400-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது . இது போன்ற தாக்குதல்களை அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும் இது போன்ற தாக்குதல்கள் மருத்துவ வசதிகளை பெறுவதற்காக கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குர்தீஷ் போராளிகள் ஆப்ரின் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள், நோயாளிகள் என 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலில் பலத்த காயமடைந்த 27 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |