சீனாவில் தற்காப்பு கலை பள்ளி கூடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஜீசெங் கவுண்டி எனும் பகுதியில் இயங்கி வரும் தற்காப்பு கலை பள்ளி கூடம் ஒன்றில் நேற்று காலை பயிற்சிக்காக 34 மாணவ, மாணவியர்கள் சென்றுள்ளனர். இந்த நிலையில் அந்த தற்காப்பு கலை பள்ளி கூடத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 18 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். இறந்தவர்களில் பலரும் குழந்தைகள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவர்களுக்கு 7 முதல் 16 வயது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் அந்த தீ விபத்தில் 4 பேருக்கு பலத்த காயங்களும், 16 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பள்ளியின் மேலாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.