Categories
உலக செய்திகள்

லிபியாவில் அரசுப்படை அதிரடி வான்தாக்குதல்… 20 கிளர்ச்சியாளர்கள் பலி!

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் லிபியாவில் மிசூராடா  நகரில் இருக்கும் கிளர்ச்சி ராணுவ படையின் நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஐநா ஆதரவு பெற்ற அரசுப்படைக்கும், நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் கிளர்ச்சி இராணுவ படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. ராணுவத் தளபதிகள் கலீஃபா ஹப்தார் (Khalifa Haftar) தலைமையிலான கிளர்ச்சி படை தலைநகர் திரிபோலியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

20 Haftar militia members killed as GNA forces' operation ...

இதனிடையே லிபியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இரு தரப்பினருமே மோதலை கைவிட்டுவிட்டு வைரசை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என ஐநா சபை வலியுறுத்தி வருகின்றது. ஆனால் கிளர்ச்சி ராணுவம் அதை எதையுமே பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே வருகின்றது. அதற்கு அரசு படையும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் தலைநகர் திரிபோலி அருகே இருக்கும் மிசூராடா நகரில் உள்ள கிளர்ச்சி ராணுவப்படை நிலைகளை குறிவைத்து லிபியா விமானப்படை விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் கிளர்ச்சி ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஏவுகணைகள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டிருந்த மூன்று ஆயுதக் கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.

Categories

Tech |