சீனாவில் பேருந்து ஏரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவின் தென்மேற்கில் உள்ள கைசவ் மாகாணத்தின் சாலை ஒன்றில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அப்பேருந்து கவிழ்ந்து சாலையை விட்டு விலகி ஷாங்காய் ஏரிக்குள் பாய்ந்தது. சீனாவின் கல்லூரி மாணவர்கள் தங்கள் வருடாந்தர நுழைவு தேர்வு எழுதுவதற்காக அப்பேருந்தில் சென்றுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் அந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் உள்பட21 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 15 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சீனாவின் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக சீன நாட்டில் பெய்துவரும் பருவ மழையினால் பல நகரங்களில் வெள்ளம் பாய்ந்து செல்கிறது .
வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனாவில் 119 பேர் காணாமல போயிருக்கலாம் அல்லது உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் இந்த சூழ்நிலையில் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.